கியா மோட்டார்ஸ் ஆக்ஸிஸ் வங்கி கைகோப்பு

வங்கி மற்றும் நிதி சார்ந்த தீர்வுகளுக்கு ஆக்ஸிஸ் வங்கியுடன் கியா மோட்டார்ஸ் கைகோத்துள்ளது.
கியா மோட்டார்ஸ் ஆக்ஸிஸ் வங்கி கைகோப்பு


வங்கி மற்றும் நிதி சார்ந்த தீர்வுகளுக்கு ஆக்ஸிஸ் வங்கியுடன் கியா மோட்டார்ஸ் கைகோத்துள்ளது.
நிதி தொடர்பான சேவைகளை அளித்திட ஆக்ஸிஸ் வங்கிக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தேவையான நிதி உதவி, ரொக்க கடனுதவி, வாகனக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து நிதி தீர்வுகளையும் ஆக்ஸிஸ் வங்கி ஒரே இடத்தில் வழங்கும்.
இந்த திட்டத்தின் மூலம் எங்களின் வாடிக்கையாளர்கள் தடையில்லா உரிமையாளர் அனுபவத்தை உணர்வார்கள் என கியா மோட்டார்ஸ் இந்தியாவின் செயல் இயக்குநரும், தலைமை விற்பனை அதிகாரியுமான யோங் எஸ் கிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
ஆக்ஸிஸ் வங்கி இந்தியா முழுவதுமுள்ள 3,964 கிளைகளின் மூலம் கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவை தீர்வுகளை அளிக்கவுள்ளது.
இவ்வாண்டின் பிற்பகுதியில் கியா மோட்டார்ஸ் தனது முதல் மாடல் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com