சுடச்சுட

  

  மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சி ஏற்பட்டது.
  பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாகவிருந்ததையொட்டி முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தை மேற்கொண்டனர். இதனால், சர்வதேச சந்தை சூழல் நன்கு இருந்த போதிலும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் சுணக்கம் காணப்பட்டது.
  ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலை 2.63 சதவீதம் வரை சரிவடைந்தது. அதேசமயம், சன்பார்மா, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 2 சதவீதம் வரை உயர்ந்தன.
  மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிந்து 36,153 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 57 புள்ளிகள் குறைந்து 10,831 புள்ளிகளில் நிலைத்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai