சுடச்சுட

  

  ஐஓசி நிதி விவகாரப்பிரிவு இயக்குநராக ஏ.கே.சர்மா மீண்டும் நியமனம்

  By DIN  |   Published on : 19th February 2019 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sharma


  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவன நிதி விவகாரப் பிரிவின் இயக்குநராக ஏ.கே.சர்மாவை மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது.
  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதி விவகாரப்பிரிவு இயக்குநர் பதவியிலிருந்து ஏ.கே.சர்மா கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இருப்பினும், அந்தப் பதவியில் மேலும் 3 மாதங்களுக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியிலிருந்து அவர் அந்தப் பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் தொடர்பான விலைகளை நிர்ணயிப்பது தொடர்பான முடிவை ஐஓசி நிறுவனத்தின் நிதி விவகாரப் பிரிவு இயக்குநரே எடுப்பார். மக்களவைக்கு பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதி, அதில் ஏற்கெனவே முன் அனுபவம் கொண்ட ஏ.கே.சர்மாவையே மீண்டும் அப்பதவியில் மத்திய அரசு நியமித்திருப்பதாக தெரிகிறது.
  ஷர்மாவை 6 மாதங்களுக்கு ஐஓசி நிறுவன நிதி விவகாரப்பிரிவின் இயக்குநர் பதவியில் நியமிப்பது தொடர்பான திட்டம் முதலில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறகு அதை 3 மாதங்களாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறைத்துள்ளார். பிறகு அந்தத் திட்டம், நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai