சுடச்சுட

  


  ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:
  அசோக் லேலண்ட் சென்ற டிசம்பரில் 15,493 வார்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2017 டிசம்பரில் விற்பனையான 19,251 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் குறைவாகும்.
  நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை 15,948 என்ற எண்ணிக்கையிலிருந்து 29 சதவீதம் சரிவடைந்து 11,295-ஆக காணப்பட்டது.
  இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை டிசம்பரில் 27 சதவீதம் அதிகரித்து 4,198-ஆக இருந்தது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai