வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை: ரூ.10,500 கோடி திரட்டுகிறது ஐஓசி

வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை மூலம் ரூ.10,500 கோடியை (150 கோடி டாலர்) திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை: ரூ.10,500 கோடி திரட்டுகிறது ஐஓசி

வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை மூலம் ரூ.10,500 கோடியை (150 கோடி டாலர்) திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை திரட்ட வெளிநாட்டு கடன்பத்திர விற்பனையை மேற்கொள்ள ஐஓசி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 75-150 கோடி டாலரை அந்நிறுவனம் திரட்டவுள்ளது.
 இக்கடன்பத்திரங்களுக்கு மூடீஸ் நிறுவனம் பிஏஏ2 தரக் குறியீட்டையும், ஃபிட்ச் பிபிபி- தரக் குறியீட்டையும் வழங்கியுள்ளன. வெளியிடப்படவுள்ள கடன்பத்திரங்களுக்கான
 முதிர்வுக் காலம் குறித்து உடனடியாகக் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பிஎஸ்-6 புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்துவது ஐஓசி-க்கு தற்போது அத்தியாவசிய நடவடிக்கையாகியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் மூலதனச் செலவு கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த 5-6 ஆண்டுகளில் அந்நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000-ரூ.30,000 கோடி மூலதனம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த முதலீட்டு நடவடிக்கைகள் நடுத்தர கால அளவில் ஐஓசி-யின் லாபம் அதிகரிக்க உறுதுணையாக அமையும் என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com