சுடச்சுட

  

  என்சிடி கடன் பத்திரங்கள்: முதலீட்டை ஈர்க்க நிறுவனங்கள் கையாண்ட புதிய உத்தி!

  By DIN  |   Published on : 07th January 2019 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  NCD_COVER

  வாராக் கடன் பிரச்னை காரணமாக, நிறுவனங்களுக்கு கடன் அளிக்க வங்கிகள் தயங்கி வருவதால், தங்களுக்குத் தேவையான நிதியை வங்கிகளிடமிருந்து பெறுவது நிறுவனங்களுக்கு அண்மைக் காலமாக அவ்வளவு எளிதாக இல்லை.
   அதன் காரணமாக, நிறுவனங்கள் நாடியுள்ள புதிய உத்திதான், அதிக அளவில் என்சிடி கடன்பத்திரங்களை வெளியிடுவது!
   முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனம் திரட்டுவதற்காக, நிறுவனங்கள் வெளியிடும் கடன்பத்திர வகைகளில் ஒன்றுதான் "பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள்' (என்சிடி).
   அத்தகைய கடன் பத்திரங்களை பங்குகளாக மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. என்சிடி கடன்பத்திரங்களுக்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது.
   இந்தச் சூழலில், இந்திய நிறுவனங்கள் தங்களது நிதித் தேவைக்காக 2018-ஆம் ஆண்டில் என்சிடி கடன் பத்திரங்களை மிக அதிக அளவில் வெளியிட்டன.
   அந்த ஆண்டில் நிறுவனங்கள் வெளியிட்ட என்சிடி கடன் பத்திரங்களின் மதிப்பு, முந்தைய ஆண்டைப் போல் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக "செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.
   அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2018-ஆம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள் என்சிடி கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.29,394 கோடி நிதி திரட்டியுள்ளன.
   அதற்கு முந்தைய 2017-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை நிறுவனங்கள் திரட்டிய என்சிடி கடன் பத்திர முதலீடு ரூ.9,779 கோடி மட்டுமே ஆகும். அத்துடன் ஒப்பிடுகையில், 2018-ஆம் ஆண்டின் என்சிடி கடன் பத்திர வெளீடு ஏறத்தாழ மும்மடங்கு அதிகமாகியிருக்கிறது.
   அதற்குக் காரணம், 2018-ஆம் ஆண்டில், நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பொதுத் துறை வங்கிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை எனவும், அதனால் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்காக அதிக அளவில் கடன் பத்திரங்களை வெளியிட்டதாகவும் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
   அதுமட்டுமன்றி,, வங்கி வட்டி விகிதங்களைவிட என்சிடி கடன் பத்திர வட்டி விகிதங்கள் அதிகம் என்பதால் முதலீட்டாளர்களும் என்சிடி கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.
   இதன் காரணமாகவே, முந்தைய ஆண்டைவிட 2018-ஆம் ஆண்டில் என்சிடி கடன் பத்திர முதலீடு மும்மடங்காக உயர்ந்துள்ளதாக செபி அமைப்பு தெரிவித்துள்ளது.
   அந்த வகையில், வங்கிகளிடமிருந்து கிடைக்காத நிதியை பங்குபத்திர முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவனங்கள் பெற்றுள்ளன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai