சுடச்சுட

  


  இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மிகவும் சுணக்கத்துடன் காணப்பட்டது. 
  பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 
  இருப்பினும், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதை அடுத்து, சந்தைகளில் வர்த்தகம் மந்த நிலைக்கு சென்றது. முதலீட்டாளர்களும் பணத் தேவை கருதி அதிக அளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
  வியாழக்கிழமை வெளியிடப்பட்ட டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிறுவனப் பங்குகளின் விலை 2.45 சதவீதம் சரிவைக் கண்டது.
  இதைத் தவிர, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், யெஸ் வங்கி, எல் அண்டு டி பங்குகளின் விலை 3.26 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
  அதேசமயம், ஐடிசி, ஓஎன்ஜிசி, வேதாந்தா, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி பங்குகளின் விலை 2.02 சதவீதம் வரை உயர்ந்தன.
  மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 36,009 புள்ளிகளாக நிலைத்தது.
  தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 26 புள்ளிகள் குறைந்து 10,794 புள்ளிகளாக நிலைத்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai