சுடச்சுட

  

  மாருதியின் புதிய வேகன்ஆர் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்

  By DIN  |   Published on : 15th January 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bignew


  மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
  மூன்றாம் தலைமுறைக்கான வேகன்ஆர் புதிய பதிப்பு ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இக்காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  இதைத் தவிர, வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் பிக் நியூ வேகன்ஆர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றொரு மாடலில் 1 லிட்டர் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. 
  இவற்றில் ஆட்டோமேட்டிக் கியர் வசதியும் உள்ளது என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai