ஹெச்யுஎல் லாபம் ரூ.1,444 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) மூன்றாம் காலாண்டில் 
ஹெச்யுஎல் லாபம் ரூ.1,444 கோடி


வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) மூன்றாம் காலாண்டில் ரூ.1,444 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ.9,357 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் விற்பனையான ரூ.8,323 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12.42 சதவீதம் அதிகமாகும். செலவினம் ரூ.7,036 கோடியிலிருந்து 8.75 சதவீதம் உயர்ந்து ரூ.7,652 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.1,326 கோடியிலிருந்து 9 சதவீதம் அதிகரித்து ரூ.1,444 கோடியானது. விற்பனை சூடுபிடித்ததன் காரணமாக லாப வரம்பு கணிசமான அளவுக்கு அதிகரித்தது என ஹெச்யுஎல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com