நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 39,735 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,735 கோடி டாலராக (ரூ.27.81 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 39,735 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,735 கோடி டாலராக (ரூ.27.81 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின்  அந்நியச் செலாவணி கையிருப்பு 126 கோடி டாலர் (ரூ.8,820 கோடி) உயர்ந்து 39,735 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மற்றும் தங்கத்தின் மதிப்பு அதிகரித்ததையடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வைக் கண்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 268 கோடி டாலர் உயர்ந்து 39,609 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 108 கோடி டாலர் உயர்ந்து 37,137 கோடி டாலராக இருந்தது. 
தங்கத்தின் கையிருப்பு 15 கோடி டாலர் அதிகரித்து 2,184 கோடி டாலராக காணப்பட்டது.
சர்வதேச நிதியத்தில், எஸ்டிஆர் 90 லட்சம் டாலர் உயர்ந்து 147 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை  1.63 கோடி டாலர் அதிகரித்து 265 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2018 ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் சரித்திர சாதனை அளவாக 42,603 கோடி டாலரை தொட்டது. ஆனால், அதன் பிறகு சாதகமற்ற நிலவரங்களின் எதிரொலியால்  செலாவணி கையிருப்பானது  3,100 கோடி டாலருக்கும் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அதிகமாக சரிந்தது.
சந்தையில்  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரிசர்வ் வங்கி 3,400 கோடி டாலரை விற்பனை செய்துள்ளது. 
ஏறக்குறைய பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு ஜூன் இறுதியில்தான் ரிசர்வ் வங்கி 8.46 டன் தங்கத்தை வெளிச் சந்தையிலிருந்து வாங்கியது. 
இதையடுத்து ரிசர்வ் வங்கியிடம் உள்ள மொத்த தங்கத்தின் கையிருப்பானது  566.23 டன்னாக அதிகரித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com