கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,291 கோடி

தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,291 கோடியாக இருந்தது.
கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,291 கோடி


தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,291 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.7,214.21 கோடி வருவாய் ஈட்டியது. இதற்கு, முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் வருவாய் ரூ.6.049.02 கோடியாக காணப்பட்டது.
நிகர வட்டி வருவாய் ரூ.2,394 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,939 கோடியாக காணப்பட்டது. 
நிகர லாபம் ரூ.1,053 கோடியிலிருந்து 23 சதவீதம் அதிகரித்து ரூ.1,291 கோடியாக இருந்தது. 
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.31 சதவீதத்திலிருந்து குறைந்து 2.07 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.09 சதவீதத்திலிருந்து சரிந்து 0.71 சதவீதமாகவும் இருந்தது என கோட்டக் மஹிந்திரா வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com