Enable Javscript for better performance
டிவி​எஸ் மோட்டார் லாபம் ரூ.178 கோ​டி​யாக அதி​க​ரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    tvs


    டிவி​எஸ் மோட்டார் கம்​பெனி மூன்​றாம் காலாண்​டில் ரூ.178.39 கோடி நிகர லாபம் ஈட்டி​யுள்​ளது. 
    இது​கு​றித்து அந்த நிறு​வ​னம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தா​வது:
    நடப்பு நிதி​யாண்​டின் அக்​டோ​பர் முதல் டிசம்​பர் வரை​யி​லான மூன்​றா​வது காலாண்​டில் டிவி​எஸ் மோட்டார் நிறு​வ​னத்​தின் செயல்​பா​டு​கள் மூலம் கிடைத்த வரு​வாய் ரூ.4,663.98 கோ​டி​யாக இருந்​தது.
    இதற்கு முந்​தைய நிதி​யாண்​டின் இதே கால அள​வில் ஈட்டிய வரு​வாய் ரூ.3,698.67 கோ​டி​யு​டன் ஒப்​பி​டு​கை​யில் இது 26.09 சத​வீ​தம் அதி​கம்.
    நிகர லாபம் ரூ.154.35 கோ​டி​யி​லி​ருந்து 15 சத​வீ​தம் வளர்ச்சி கண்டு ரூ.178.39 கோ​டி​யாக இருந்​தது.
    டிசம்​பர் காலாண்​டில் ஏற்​று​ம​தியை உள்​ள​டக்​கிய ஒட்டு மொத்த இரு​சக்​கர வாக​னங்​க​ளின் விற்​பனை 18.9 சத​வீ​தம் அதி​க​ரித்து 9.50 லட்ச​மாக காணப்​பட்​டது. மூன்று சக்​கர வாகன விற்​பனை 47 சத​வீ​தம் உயர்ந்து 40,000-ஆக இருந்​தது என டிவி​எஸ் மோட்டார் தெ​ரி​வித்​துள்​ள​து.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai