Enable Javscript for better performance
நிஸா​னின் புதிய கிக்ஸ் கார் அறி​மு​கம்- Dinamani

சுடச்சுட

    
    nissan

    புது ​தில்​லி​யில் புதிய கிக்ஸ் மாடல் காரை செவ்​வாய்க்​கி​ழமை அறி​மு​கப்​ப​டுத்​தும் நிஸான் இந்​தியா நிறு​வ​னத்​தின் தலை​வர் தாமஸ் குயெல் மற்​றும் நிஸான் மோட்டார் கம்​பெ​னி​யின் துணைத் தலை​வர்


    நிஸான் நிறு​வ​னம் சொகுசு வகை​யைச் சேர்ந்த கிக்ஸ் காரை இந்​திய சந்​தை​க​ளில் செவ்​வாய்க்​கி​ழமை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது.
    இது​கு​றித்து நிஸான்​ இந்​தி​யா​வின் தலை​வர் தாமஸ் குயெல் கூறி​ய​தா​வது:
    எஸ்​யுவி மாடல் கிக்ஸ் கார் இந்​திய சந்​தை​க​ளுக்​கென்றே பிரத்​யே​க​மாக வடி​வ​மைக்​கப்​பட்​டது. இதில், 1.5 லிட்டர் என்​ஜின் பொருத்​தப்​பட்​டுள்​ளது.
    நிறு​வ​னத்​தின் விதி​மு​றை​க​ளின்​படி, இப்​பு​திய மாடல் பெட்ரோல் ரக கார் லிட்ட​ருக்கு 14.23 கிலோ மீட்டர் வரை​யி​லும், டீசல் ரக கார் லிட்ட​ருக்கு 20.45 கிலோ மீட்டர் வரை​யி​லும் மைலேஜ் தரும்.
    கிக்ஸ் கார்​க​ளின் விலை மாட​லுக்கு ஏற்ப ரூ.9.55 லட்​சம் முதல் ரூ.14.65 லட்​சம் வரை​யில் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.
    நிஸான் நிறு​வ​னத்​தின் மின்​சார காரான லீஃப் இந்​தி​யா​வில் இந்​தாண்டு அறி​மு​கப்​ப​டுத்​தப்​ப​டும் என்​றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai