Enable Javscript for better performance
பணி​யா​ளர்​க​ளுக்கு பங்கு விற்​பனை: ரூ.217 கோ​டியை திரட்​டி​யது இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி- Dinamani

சுடச்சுட

    

    பணி​யா​ளர்​க​ளுக்கு பங்கு விற்​பனை: ரூ.217 கோ​டியை திரட்​டி​யது இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி

    By DIN  |   Published on : 23rd January 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    iobb

    இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி அதன் பணி​யா​ளர்​க​ளுக்கு பங்​கு​களை விற்​பனை செய்​த​தன் மூலம் ரூ.217 கோ​டியை திரட்​டி​யுள்​ளது.
    இது​கு​றித்து அந்த வங்கி வெளி​யிட்ட பத்​தி​ரிகை குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது:
    இஎஸ்​பி​எஸ் எனப்​ப​டும் பணி​யா​ளர்​கள் பங்​கு​கள் வாங்​கும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்​பர் 31-ஆம் தேதி தொடங்​கப்​பட்டு 2019 ஜன​வரி 21-ஆம் தேதி​யு​டன் முடி​வ​டைந்​தது. ரூ.11.90 தள்​ளு​படி விலை​யு​டன் கூடிய இந்த திட்டத்​தில் 18.24 கோடி பங்​கு​கள் வரை வேண்டி பணி​யா​ளர்​கள் விண்​ணப்​பித்​த​னர். இதன் மூலம் வங்கி ரூ.217 கோ​டியை திரட்​டி​யது.
    பொதுத் துறை வங்​கி​க​ளி​லேயே, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்கி மட்டும்தான் இஎஸ்​பி​எஸ் திட்டத்​தில் 100 சத​வீத பங்​கு​கள் முழு​வ​தையும் 92 சத​வீத பணி​யா​ளர்​க​ளுக்கு விற்​பனை செய்துள்ளதாக அந்த வங்கி தெ​ரி​வித்​துள்​ள​து.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai