உருக்கு உற்பத்தி 12.86 கோடி டன்னை எட்டும்

நாட்டின் உருக்கு உற்பத்தி, வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 12.86 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
உருக்கு உற்பத்தி 12.86 கோடி டன்னை எட்டும்


நாட்டின் உருக்கு உற்பத்தி, வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 12.86 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து 2018-19 நிதியாண்டுக்கான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் உருக்கு உற்பத்தி 2017-18 நிதியாண்டில் 10.31 கோடி டன்னாக இருந்தது. இது, 2018-19-ஆம் நிதியாண்டில் 3.3 சதவீதம் அதிகரித்து 10.65 கோடி டன்னைத் தொட்டது.
இந்த நிலையில், மோட்டார் வாகனத் துறை, கட்டுமானம், உள்கட்டமைப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால் உருக்கிற்கான தேவை மற்றும் நுகர்வு சராசரியாக 7.4 சதவீதம் வளர்ச்சி காணும். இதனால், 2021-ஆம் ஆண்டுக்குள் உருக்கு உற்பத்தி 12.86 கோடி டன்னை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது வேகமடைந்து வரும் 2023-இல் 14 கோடி டன்னாகவும், 2030-இல் 25.5 கோடி டன்னாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
தற்போது, இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு 69 கிலோவாக உள்ளது. சர்வதேச சராசரியான 214 கிலோவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு,  தேசிய உருக்கு கொள்கையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உருக்கு உற்பத்தித் திறனை 30 கோடி டன்னாகவும், உருக்கு உற்பத்தியை 25.5 கோடி டன்னாகவும், உருக்கு நுகர்வை 160 கிலோவாகவும் அதிகரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளால், ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகிய நாடுகளுக்கான உருக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது. அதன் காரணமாக, கடந்த 2018-19-இல் உருக்கு ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96.2 லட்சம் டன்னில் இருந்து 63.6 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
அதேசமயம், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com