பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகள் விறுவிறு

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து  நான்காவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகள் விறுவிறு


பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து  நான்காவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ள பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே எழுந்தது. அதன் காரணமாக, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மேலும், பட்ஜெட்டுக்கு முன்னோட்டமான பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று வெளியான அறிவிப்பும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.
மும்பை பங்குச் சந்தையில், தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், மோட்டார் வாகனத் துறை குறியீட்டெண்கள் 1.53 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், உலோகம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.58 சதவீதம்  வரை குறைந்தது. 
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஏஷியன் பெயின்ட்ஸ், பவர்கிரிட் பங்குகளின் விலை 2.53 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
யெஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், வேதாந்தா, சன் பார்மா, டாடா ஸ்டீல், எல் அண்டு டி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் என்டிபிசி பங்குகளின் விலை 3.56 சதவீதம் வரை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 68 புள்ளிகள் உயர்ந்து 39,908 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 30 புள்ளிகள் அதிகரித்து 11,946 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com