தங்க பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயம்

புதிய வரிசையில் வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வரிசையில் வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் விற்பனை வரும் திங்கள்கிழமை (ஜூலை 8) தொடங்க உள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து ரூ.50 தள்ளுபடி தர ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
 இதையடுத்து, இந்த வகை முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரம் கிராமுக்கு ரூ.3,393- விலையில் விற்பனை செய்யப்படும் என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான தங்கப் பத்திர விற்பனைக்கான அட்டவணையை ரிசர்வ் வங்கி கடந்த மே 30-ஆம் தேதி வெளியிட்டது. அதில், நடப்பாண்டு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் தங்கப் பத்திர விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 தனி நபர் ஒருவர் நிதியாண்டுக்கு அதிகபட்சம் 500 கிராம் வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
 வங்கிகள், பங்கு விற்பனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலம் இந்த தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
 தங்கம் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்கவும் தங்கப் பத்திரங்கள் விற்பனையை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இதில் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்கப் பத்திரங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com