சுடச்சுட

    

    இந்தியாவின் உருக்குப் பொருள்கள் இறக்குமதி 78.30 லட்சம் டன்: பிரதான்

    By DIN  |   Published on : 09th July 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indus


    கடந்த நிதியாண்டில் வர்த்தகத்துக்கு தயாரான உருக்குப் பொருள்களின் இறக்குமதி 78.30 லட்சம் டன்னாக இருந்தது என்று  நாடாளுமன்றத்தில் மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
    இதுகுறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
    வர்த்தகத்துக்கு தயார் நிலையில் உள்ள உருக்குப் பொருள்களின் இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 74.80 லட்சம் டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2018-19 நிதியாண்டில் அவற்றின் இறக்குமதி 4.7 சதவீதம் அதிகரித்து 78.30 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
    குறிப்பாக, துருப்பிடிக்காத உருக்கு,  குளிரூட்டப்பட்ட மற்றும் சூடான உருக்குத் தகடுகள், எலக்ட்ரிக்கல் ஷீட் உள்ளிட்ட பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai