இன்டஸ்இண்ட் வங்கி: புதிய கடன் அட்டை அறிமுகம்

தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கி பிரத்யேக அம்சங்களைக் கொண்ட செலஸ்டா அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு


தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கி பிரத்யேக அம்சங்களைக் கொண்ட செலஸ்டா அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு என்ற கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து அந்த வங்கியின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் அனில் ராமச்சந்திரன் கூறியதாவது:
வாடிக்கையாளர்ளுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்கி வருவதன் ஒரு பகுதியாக இப்புதிய கடன் அட்டை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டவர்களுக்கு இந்த கடன் அட்டை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கடன் அட்டையை பயன்படுத்தி சர்வதேச செலவுகளை மேற்கொள்வோருக்கு அதிக புள்ளிகள் வெகுமதியாக (ரிவார்ட் பாய்ண்ட்ஸ்) வழங்கப்படும். மேலும், உள்நாட்டு விமான நிலையங்களில் இந்த கடன் அட்டையை எத்தனைமுறை வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி,  ஷாங்ரி-லா கோல்டன் சர்க்கிள் ஜாதே மற்றும் தாஜ் இன்னர் சர்க்கிள் லாயல்டி திட்டங்களில் இலவச உறுப்பினர் சேர்க்கையை இப்புதிய கடன் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com