ஸ்டெர்லிங்-வில்ஸன் சோலார் நிறுவனத்தின் ரூ.4,500 கோடி புதிய பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி

ஸ்டெர்லிங்-வில்ஸன் சோலார் நிறுவனத்தின் ரூ.4,500 கோடி புதிய பங்கு வெளியிடும் திட்டத்துக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து செபி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்டெர்லிங்-வில்ஸன் சோலார் நிறுவனத்தின் தலைவர்களான யாசுதி தருவாலா மற்றும் சபூர்ஜி பலோன்ஜி வசமுள்ள பங்குகளை புதிய பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய அந்நிறுவனம், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி விண்ணப்பித்தது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மொத்த மதிப்பு ரூ.4,500 கோடி.
அந்நிறுவனத்தின் ஜூலை 4-ஆம் தேதி பரிந்துரைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இப்புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என செபியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி ஸ்டெர்லிங்-வில்ஸன் சோலார் நிறுவனத்தின் மொத்த ஆர்டர்களின் மதிப்பு ரூ.4,309.09 கோடியாக இருந்தது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com