சுடச்சுட

  
  FOREX

  நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 42,991 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
   இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: தங்கம் மற்றும் செலாவணி சொத்துக்களின் மதிப்பு கடுமையாக அதிகரித்ததையடுத்து ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 223 கோடி டாலர் (ரூ.15,610 கோடி) அதிகரித்து 42,991கோடி டாலரை (ரூ.3.09 லட்சம் கோடி) எட்டி புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.
   இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 126 கோடி டாலர் உயர்ந்து 42,768 கோடி டாலராக காணப்பட்டது.
   அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 90.68 கோடி டாலர் உயர்ந்து 40,080 கோடி டாலரானது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 134 கோடி டாலர் உயர்ந்து 2,430 கோடி டாலராக காணப்பட்டது.
   அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 47 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகஇருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai