சுடச்சுட

  
  FISH

  இந்தியாவின் கடல் மீன் உற்பத்தி கடந்தாண்டில் 9 சதவீதம் சரிவைக் கண்டது.
   இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சிஎம்எஃப்ஆர்ஐ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடல் மீன் உற்பத்தி 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-இல் 3.47 லட்சம் டன் (9 சதவீதம்) குறைந்து 34.9 லட்சம் டன்னாக இருந்தது. இதற்கு, மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மீன்பிடிப்பு முறையே 2.01 லட்சம் டன், 0.95 லட்சம் டன் மற்றும் 0.86 லட்சம் டன் குறைந்து போனதே முக்கிய காரணம். கடன்மீன் உற்பத்தியில் கானாங்கெளுத்தி 2.84 லட்சம் டன் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, தலைக்காலிகள் (செபலோபோட்ஸ்-2.21 லட்சம் டன்), பெனாய்டு அல்லாத இறால்கள் (1.94 லட்சம் டன்), ரிப்பன் மீன்கள் (1.94 லட்சம் டன்), பெனாய்டு இறால்கள் (1.84 லட்சம் டன்) ஆகியவை உள்ளன. குறிப்பாக, கடந்த 2017-இல் 3.37 லட்சம் டன்னாக காணப்பட்ட மத்தி மீன்கள் உற்பத்தி 2018-இல் 1.55 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளதாக அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai