சுடச்சுட

  
  bajaj


  பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.56.7 கோடி நிகர லாபம் ஈட்டியது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பு  2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் ரூ.246.7 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.224.34 கோடியுடன் ஒப்பிடும்போது 9.96 சதவீதம் அதிகமாகும். 
  ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.52.07 கோடியிலிருந்து 8.89 சதவீதம் அதிகரித்து ரூ.56.7 கோடியானது என மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
  கேசப் பராமரிப்புக்கான பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வரும் பஜாஜ் கன்ஸ்யூமர் கேர், கடந்த 2013 ஆகஸ்டில் ஓஸோன் ஆயுர்வேதிக் நிறுவனத்தின் நோமார்க்ஸ்' பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம் சரும பராமரிப்புத் துறையிலும் கால்பதித்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai