சுடச்சுட

  

  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் கடன்பத்திர வெளியீடு ஜூலை 17-இல் தொடக்கம்

  By DIN  |   Published on : 16th July 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sriram1


  வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திர வெளியீடு ஜூலை 17-இல் தொடங்கவுள்ளது. 
  இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் ரூ.300 கோடிக்கு பங்குகளாக மாற்ற இயலாத  கடன்பத்திரங்களை வெளியிடவுள்ளது. அதற்கான வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் ரூ.10,000 கோடி வரை திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
  இந்த கடன்பத்திரங்களின் முதிர்வு காலம், 30, 42, 60 மற்றும் 84 மாதங்களாக இருக்கும். கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 9.12 சதவீதம் முதல் 9.70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  வரும் புதன்கிழமை (ஜூலை 17) தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் முடிவடையும். தேவையேற்படின் இந்த வெளியீட்டுக் காலத்தை முன்னதாகவே முடிக்கவோ அல்லது நீட்டித்துக் கொள்ளவோ திட்டமிடப்பட்டுள்ளது. 
  இக்கடன்பத்திரங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
  திரட்டப்படும் இந்த தொகை, கடன் வழங்குதல், வட்டி திருப்பிச் செலுத்துதல், ஏற்கெனவே உள்ள கடன்களின் அசல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai