சுடச்சுட

  

  பயணிகள் வாகன சில்லறை விற்பனை 4.6 சதவீதம் குறைவு: எஃப்ஏடிஏ

  By DIN  |   Published on : 17th July 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  fad


  பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை ஜூன் மாதத்தில் 4.6 சதவீதம் குறைந்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
  பருவமழை தாமதம், பணப்புழக்கம் குறைவு போன்ற காரணங்களால் கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 2,24,755-ஆக மட்டுமே இருந்தது. கடந்தாண்டு ஜூனில் விற்பனையான 2,35,539 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 4.6 சதவீதம் குறைவாகும்.
  மறுபுறம், பயணிகள் வாகன மொத்த விற்பனையும் 2,73,748 என்ற எண்ணிக்கையிலிருந்து 17.45 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2,25,732 ஆனது.
  இரு சக்கர வாகன சில்லறை விற்பனை 13,94,770-லிருந்து 5 சதவீதம் குறைந்து 13,24,822-ஆனது. வர்த்தக வாகன விற்பனையும் 60,378 என்ற எண்ணிக்கையிலிருந்து 19.3 சதவீதம் குறைந்து 48,752-ஆனது.
  மூன்று சக்கர வாகன விற்பனை 2.8 சதவீதம் குறைந்து 48,447-ஆக காணப்பட்டது. 
  அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை ஜூன் மாதத்தில் 17,40,524-லிருந்து 5.4 சதவீதம் குறைந்து 16,46,776-ஆக இருந்தது. 
  ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 1 சதவீதம் குறைந்து 7,28,785-ஆனது. ஒட்டுமொத்த வாகன விற்பனை 6 சதவீதம் சரிந்து 51,16,718-ஆக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai