சுடச்சுட

  
  tvs


  சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.151.24 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.160.05 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5.5 சதவீதம் குறைவாகும்.
  ஒட்டுமொத்த வருவாய் ரூ.4,626.15 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,026.27 கோடியானது. நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.4,385.50 கோடியிலிருந்து ரூ.4,793.40 கோடியாக உயர்ந்துள்ளது.
  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை (ஏற்றுமதி உள்பட) 8.84 லட்சமாக இருந்தது. இது, கடந்தாண்டு விற்பனை எண்ணிக்கையான 8.93 லட்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என செபியிடம் டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai