சுடச்சுட

  
  sen


  முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடனே முடிவடைந்தது.
  சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள், மோட்டார் வாகன துறையில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை உள்ளிட்டவை பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் ஆர்வத்தில் தடையை ஏற்படுத்தின.
  அதேசமயம், அமெரிக்க மத்திய வங்கி கொள்கை குழு கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு, 
  அமெரிக்கா-சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தை ஆகியவற்றால் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 
  அது, இந்தியப் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
  நிதிப் புழக்கம் தொடர்பான இடர்பாடுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் வங்கி, மோட்டார் வாகனம், எரிசக்தி துறை பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். 
  யெஸ் வங்கி பங்கின் விலை 9.13 சதவீதம் சரிந்தது. இதனைத் தொடர்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி 6.66 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 6.01 சதவீதமும், சன் பார்மா 4.79 சதவீதமும், எஸ்பிஐ பங்கின் விலை 4.70 சதவீதமும் குறைந்தன.
  அதேசமயம், பார்தி ஏர்டெல் பங்கின் விலை 3.19 சதவீதமும், டிசிஎஸ் 2.32 சதவீதமும் அதிகரித்தன.
  மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 289 புள்ளிகள் சரிந்து 37,397 புள்ளிகளாக நிலைத்தது. 
  தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 103 புள்ளிகள் குறைந்து 11,085 புள்ளிகளாக நிலைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai