பஜாஜ் ஆட்டோ விற்பனை 3 சதவீதம் அதிகரிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ விற்பனை 3 சதவீதம் அதிகரிப்பு


பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 4,19,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் விற்பனையான 4,07,044  வாகனங்களுடன் ஒப்பிடுகையில்  இது 3 சதவீதம் அதிகமாகும். 
மோட்டார்சைக்கிள் விற்பனை 3,42,595 என்ற எண்ணிக்கையிலிருந்து 7 சதவீதம் உயர்ந்து 3,65,068 ஆகியுள்ளது.
அதேசமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை 64,449-லிருந்து 16 சதவீதம் சரிவடைந்து 54,167 ஆனது.
நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி அந்த மாதத்தில் 1,83,411-ஆக காணப்பட்டது. 2018 மே மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 1,82,419 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கையில் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com