சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் உச்சத்திலிருந்து சரிந்தன.
சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிவு


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் உச்சத்திலிருந்து சரிந்தன.
ரிசர்வ் வங்கி வரும் வியாழக்கிழமை தனது நிதி கொள்கை முடிவுகளை வெளியிடவுள்ளது. இதில், கடனுக்கான வட்டி விகிதங்கள் மூன்றாவது முறையாக 0.25 சதவீதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தை வட்டாரத்தில் பரவலாகவே காணப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நோக்குடன் முதலீட்டாளர்கள் மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததால் வர்த்தகம் மந்த நிலை கண்டது.  
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டெண் 1.63 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தொழில்நுட்பம், மருந்து, எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண்களும் பின்னடைவை கண்டது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 3.08 சதவீதம் வரை சரிந்தது.
அதேசமயம், யெஸ் வங்கி, என்டிபிசி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருந்ததையடுத்து அந்நிறுவனப் பங்குகளின் விலை 2.71 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 184 புள்ளிகள் குறைந்து 40,083 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 66 புள்ளிகள் சரிந்து 12,021 புள்ளிகளாக நிலைத்தது.
 ரம்ஜானை முன்னிட்டு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு புதன்கிழமை (ஜூன் 5) விடுமுறை விடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com