ரூ.1,550 கோடிக்கு புதிய பங்கு வெளியீடு: செபியின் அனுமதியைப் பெற்றது பென்னா சிமென்ட்

பென்னா சிமென்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ.) மூலம் ரூ.1,550 கோடி திரட்டிக் கொள்ள செபி அனுமதி அளித்துள்ளது.
ரூ.1,550 கோடிக்கு புதிய பங்கு வெளியீடு: செபியின் அனுமதியைப் பெற்றது பென்னா சிமென்ட்


பென்னா சிமென்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் (ஐ.பி.ஓ.) மூலம் ரூ.1,550 கோடி திரட்டிக் கொள்ள செபி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.1,550 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி பென்னா சிமென்ட் கடந்தாண்டு நவம்பர் மாதம் செபியிடம் விண்ணப்பித்திருந்தது. இதனை ஆய்வு செய்த செபி நடப்பாண்டு மே 31-ஆம் தேதியன்று நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ.-மூலம் ரூ.1,300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் புதிய பங்குகளும், பென்னா சிமென்டின் மேம்பாட்டாளரான பிஆர் சிமென்ட் ஹோல்டிங்ஸின் ரூ.250 கோடி மதிப்பிலான பங்குகள் ஓஎஃப்எஸ் முறையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.
எடல்வெய்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ், ஐஐஎஃப்எல் ஹோல்டிங்ஸ், ஜேஎம் பைனான்ஸியல் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் ஆகியவை இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளதாக பென்னா சிமென்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com