சுஸூகியின் புதிய ஜிக்ஸர் மாடல்கள் அறிமுகம்

சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஜிக்ஸர் எஸ்எஃப்250, ஜிக்ஸர் எஸ்எஃப் என்ற இரண்டு புதிய மாடல்களை சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.
சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியாவின் புதிய ஜிக்ஸர் பைக்குகளை சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கொய்ஷிரோ ஹிராவோ (வலது), துணைத் தலைவர் தேவஷிஸ் ஹண்டா.

இதுகுறித்து சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் தலைவர் கொய்ஷிரோ ஹிராவோ கூறியதாவது:
இந்திய சந்தையின் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவனம் சுஸூகி ஜிக்ஸர் எஸ்எஃப் வரிசையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், உள்ளூர் சந்தையில் இருசக்கர பிரிவு விற்பனையில் நிறுவனத்தின் பங்களிப்பு மேலும் வலுப்படும்.
மெட்டாலிக் பிளாட்டினம் சில்வர் மற்றும் மெட்டாலிக் பிளாக் என்ற இரு வண்ணங்களில் வெளிவரும் ஜிக்ஸர் 
எஸ்எஃப்250 பைக், 200 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட பைக்கை விரும்புவோருக்கு சிறந்த மாற்றாக இருக்கும். 
இதன் விலை ரூ.1.70 லட்சமாகும்.
அதேபோன்று, 150 சிசி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்கின் விலை ரூ.1.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சுஸூகியின் புதிய ஜிக்ஸர் 250எஸ்எஃப் அறிமுகம் யமஹாவின் 250சிசி, ஹோண்டாவின் சிபிஆர்250, டிவிஎஸ் 
மோட்டாரின் அப்பாச்சி 200 சிசி பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோன்று, ஜிக்ஸர் எஸ்எஃப் பைக் அறிமுகம் யமஹாவின் எஃப்இசட், ஹோண்டா சிபிஆர் 150, டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com