5 ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தியில் காதியின் பங்களிப்பு இருமடங்காக உயர்வு

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு  5 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்úஸனா மேலும் கூறியதாவது:
2014-15-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி 2,486 மில்லியன் சதுர மீட்டராக இருந்தது. இதில், காதியின் பங்களிப்பு 105.38 மில்லியன் சதுர மீட்டராகும். மொத்த ஜவுளி உற்பத்தியில் இது 4.23 சதவீதமாகும்.
இந்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் ஜவுளி உற்பத்தி 2,012 மில்லியன் சதுர மீட்டராக குறைந்தது. இதில், காதி துணியின் பங்களிப்பு 170.80 மில்லியன் சதுர மீட்டராகும். ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் இது 8.49 சதவீதமாகும்.
ஆக, கடந்த 2014-15-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 ஆண்டுகளில் மொத்த ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு இரண்டு மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com