வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரின் பதவிக்காலம் நீட்டிப்பு

வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் (டிஜிஎஃப்டி) அலோக் வரதன் சதுர்வேதியின் பதவிக்காலம்  நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலன்,  பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநராக உள்ள அலோக் வர்தன் சதுர்வேதியின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரையில் அப்பதவியில் இருப்பார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்திலிருந்து 1986-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான சதுர்வேதி, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com