Enable Javscript for better performance
பேட்டரி வாகனங்கள் குறித்த திட்டம்: டிவிஎஸ், பஜாஜ் ஆட்சேபம்- Dinamani

சுடச்சுட

    

    பேட்டரி வாகனங்கள் குறித்த திட்டம்: டிவிஎஸ், பஜாஜ் ஆட்சேபம்

    By DIN  |   Published on : 25th June 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvs


    இருசக்கர, மூன்று சக்கர மோட்டார் வாகன பயன்பாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டுக்குள் பேட்டரி வாகன பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்துக்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆகியன ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
    மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிடம் நீதி ஆயோக் அமைப்பு கடந்த வாரம், இருசக்கர் மோட்டார் வாகன பயன்பாட்டிலிருந்து 2025ஆம் ஆண்டுக்குள் பேட்டரி வாகன பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்தை  2 வாரங்களில் சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தது.
    இதற்கு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆகியன ஆட்சேபம் தெரிவித்துள்ளன. 
    இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான வேணு ஸ்ரீநிவாசன் கூறுகையில், 
    இதுவொன்றும் ஆதாரோ, தொழில்நுட்பமோ, பதிவு அட்டைகளோ கிடையாது. ஒட்டுமொத்த விநியோக அமைப்பையும் இதற்காக ஏற்படுத்த வேண்டும் என்றார்.
    பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், 100 சதவீத மாற்றம் தேவையில்லாத ஒன்று என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai