சுடச்சுட

  

  தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 118.38 கோடியாக உயர்வு

  By DIN  |   Published on : 26th June 2019 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mobile


  இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 118.38 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முந்தைய மார்ச் மாதத்தைவிட கடந்த ஏப்ரல் மாதம் மிகக் குறைந்த அளவு அதிகரித்துள்ளது.
  2019-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 118.35 கோடியாக இருந்த அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாத இறுதியில் 118.38 கோடியாக உயர்ந்துள்ளது. இது 0.02 சதவீத வளர்ச்சியாகும்.
  கம்பியில்லா தொலைத் தொடர்புப் பிரிவைப் பொருத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் 116.18 கோடியாக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் 116.23 கோடியாக அதிகரித்தது.
  இந்தப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவும், பிஎஸ்என்எல்-லும் 83.1 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்திருந்தாலும், பார்தி எர்டெல், டாடா டெலிசர்வீசஸ், வோடஃபோன் ஐடியா, எம்டிஎன்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்கள் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்ததால் இப்பிரிவு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 4.9 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது என்று டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai