சுடச்சுட

  
  tata


  டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹெக்ஸா மாடலில் புதிய எஸ்யுவி காரை வியாழக்கிழமை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை, ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.18.36 லட்சம் வரை தில்லி விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  இந்த நிறுவனம், ஹெக்ஸா மாடல் காரை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. 
  இந்நிலையில், ஆண்ட்ராய்டு இணைப்புடன் 7 அங்குல தொடுதிரை தகவல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, ஹெக்ஸா மாடலின் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில், 2019-ஆண்டுக்கான புதிய மாடல் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் விற்பனை துணை மேலாளர் எஸ்.என்.பர்மன் வெளியிட்ட அறிக்கையில், ஹெக்ஸா மாடல் காருக்கு ஏற்கெனவே வாகன ஓட்டிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; இந்நிலையில், இந்தப் புதிய மாடல் காரும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai