ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து வர்த்தக ஆணை: எல் & டி

ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து வர்த்தக ஆணை கிடைத்துள்ளதாக எல் & டி ஹைட்ரோகார்பன் என்ஜினியரிங் தெரிவித்துள்ளது.


ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து வர்த்தக ஆணை கிடைத்துள்ளதாக எல் & டி ஹைட்ரோகார்பன் என்ஜினியரிங் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான வயல்களில் பொறியியல், கொள்முதல், கட்டுமானம், நிறுவுதல், பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள எல் & டி ஹைட்ரோகார்பன் நிறுவனத்துக்கு வர்த்தக ஆணை கிடைத்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் சரியான மதிப்பு குறித்த தகவல்களை எல் & டி ஹைட்ரோகார்பன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த வர்த்தக ஆணைகளின் மதிப்பு ரூ.1,000 கோடியிலிருந்து ரூ.2,500 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com