சுடச்சுட

  

  பணியாளர்களுக்கு பங்கு விற்பனை: பேங்க் ஆஃப் இந்தியா ரூ.660 கோடி திரட்டல்

  By DIN  |   Published on : 13th March 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bankofindia


  பணியாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொதுத் துறையைச் சேர்ந்த  பேங்க் ஆஃப் இந்தியா ரூ.660.80  கோடியை திரட்டியது. 
  இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  இஎஸ்பிஎஸ் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு 6 கோடியே 25 லட்சத்து 52 ஆயிரத்து 188 பங்குகள் ஒதுக்கப்பட்டது. 
  இந்த பங்குகள் அனைத்தும் தலா ரூ.10 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் வங்கி ரூ.660.80 கோடி மதிப்பிலான தொகையை திரட்டிக் கொண்டது.
  இந்த பங்கு விற்பனையின் போது 24.28 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டன. இஎஸ்பிஎஸ் பங்கு விற்பனை திட்டத்தில் வங்கியின் 94.70 சதவீத பணியாளர்கள் பங்கேற்றனர்.
  இந்த பங்குகள் அனைத்தும் குறைந்தபட்ச கட்டாய வைத்திருப்பு காலம்  ஓராண்டு என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai