சுடச்சுட

  

  பிஏசிஆர் தனியார் ஐடிஐ-க்கு அகில இந்திய அளவில் 3-ஆவது இடம்

  By DIN  |   Published on : 13th March 2019 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramco


  அகில இந்திய அளவில் சிறந்த தொழில் பயிற்சி மையத்துக்கான (ஐடிஐ) 3-ஆவது இடத்தை ராம்கோ சிமென்ட் நடத்தும் பிஏசிஆர் தனியார் ஐடிஐ பிடித்தது.
  இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் ஐடிஐ-க்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 33 தனியார் ஐடிஐ-க்களில் 73.7 சதவீத மதிப்பெண்களைப் பெற்று ராம்கோவின் பிஏசி ராமசாமி ராஜா ஐடிஐ 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடந்த 2010-ஆம் ஆண்டு மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் பிஏசிஆர் ஐடிஐ-யை ராம்கோ சிமென்ட்ஸ்  தொடங்கியது. சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழில்நுட்ப திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த ஐடிஐ பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai