சுடச்சுட

  

  ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் 32 சதவீத வளர்ச்சி

  By DIN  |   Published on : 15th March 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறை நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் பிப்ரவரி மாதத்தில் 32.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
  இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் சென்ற பிப்ரவரி மாதத்தில் முதல் முறை பிரீமியமாக ரூ.18,209.50 கோடியை  ஈட்டியுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய பிரீமியமான ரூ.13,274.96 கோடியுடன் ஒப்பிடுகையில் 32.7 சதவீதம் அதிகம்.
  ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் எல்ஐசியின் பங்களிப்பு 66.26 சதவீதமாகும். இந்நிறுவனத்தின் பிப்ரவரி மாத முதல் முறை பிரீமியம் ரூ.12,055.81 கோடியாக இருந்தது.
  இதர 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 33.74 சதவீதமாக உள்ளது. இந்த நிறுவனங்களின் பிப்ரவரி மாத முதல் முறை பிரீமியம் வசூல் ரூ.6,153.70 கோடியாக இருந்தது. கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் இந்நிறுவனங்களின் முதல் முறை பிரீமியம் வசூல் ரூ.17.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
  தனியார் துறை நிறுவனங்களில் எஸ்பிஐ லைஃபின் புதிய பிரீமியம் வருவாய் 49 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,055.32 கோடியாகவும், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் பிரீமியம் 33.1 சதவீதம் உயர்ந்து ரூ.1,039.14 கோடியாகவும், ஆதித்யா பிர்லா சன் லைஃப் முதல் முறை பிரீமியம் 21.6 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.222.26 கோடியாகவும் இருந்தன.
  ஏகான் நிறுவனத்தின் முதல் முறை பிரீமியம்  பிப்ரவரி மாதத்தில் 59.3 சதவீதம் அதிகரித்து ரூ.48.26 கோடியாகவும், மேக்ஸ் லைஃப் பிரீமியம் 23.7 சதவீதம் உயர்ந்து ரூ.529.77 கோடியாகவும், கோட்டக் மஹிந்திரா லைஃப் முதல் பிரீமியம் வசூல் 15.25 சதவீதம் அதிகரித்து  ரூ.403.01 கோடியாகவும் காணப்பட்டன.
  அதேசமயம், ஹெச்டிஎஃப்சி லைஃப் புதிய பிரீமியம் 0.54 சதவீதம் குறைந்து ரூ.1,184.46 கோடியாகவும், டிஹெச்எஃப்எல் ப்ரமெரிக்கா லைஃப் பிரீமியம் 51.7 சதவீதம் சரிந்து ரூ.65.01 கோடியாகவும், பார்த்தி ஆக்ஸா லைஃப் பிரீமியம் 98 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.78.62 கோடியாகவும், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் புதிய பிரீமியம் 11 சதவீதம் குறைந்து ரூ.328.48 கோடியாகவும் இருந்தன என அந்த ஆணையத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai