சுடச்சுட

  


  இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 
  லாப நோக்கம் கருதி தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் விற்பனை செய்யப்பட்டதையடுத்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை சரிவை சந்தித்தது.
  அதேசமயம், நிதி மற்றும் மின் துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. 
  மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் வெறும் 2.72 புள்ளிகள் உயர்ந்து 37,754 புள்ளிகளில் நிலைத்தது. அதேபோன்று, நிஃப்டி 1.55 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 11,343 புள்ளிகளில் நிலைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai