சுடச்சுட

  
  mercAMGC43

  புது தில்லியில் வியாழக்கிழமை மெர்சிடிஸ்-பென்ஸின் புதிய காரை அறிமுகப்படுத்தும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்டின் சுவெங். 


  ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ரூ.75 லட்சம் விலையில் புதிய சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  இதுகுறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான மார்டின் சுவெங் கூறியதாவது: 
  மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி சி 43 4மேட்டிக் கூப் என்ற புதிய காரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.இதில், 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது தரவல்ல 287கி.வா. பவர் மற்றும் 520 என்எம் டார்க்கானது 100 கி.மீ வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிப்பிடிக்க உதவுகிறது. இதன் விற்பனையக விலை ரூ.75 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. 
  கடந்த ஜனவரி மாத அறிமுகமான வி கிளாஸ் காருக்குப் பிறகு தற்போதுதான் மற்றொரு தயாரிப்பை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏஎம்ஜி வகை தயாரிப்புகள்  மிகப் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. எனவே, இனி அறிமுகமாகும் கார்கள் 43,45,46 மற்றும் ஜிடி பிரிவுகளில் இருக்கும்.
  இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடு நடப்பு 2019-ஆம் ஆண்டுடன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. எனவே,இந்த ஆண்டு எங்களுக்கு உற்சாகமானதாக இருக்கும். வாடிக்கையாளர்களிடையே திருப்தியை ஏற்படுத்துவதே நிறுவனத்தின் முக்கிய இலக்கு என்றார் அவர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai