சுடச்சுட

  

  வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை தெரிவிக்க இந்தியாவுக்கு கதவு திறந்தே உள்ளது: அமெரிக்கா

  By  வாஷிங்டன்/புது தில்லி  |   Published on : 17th March 2019 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  EXPORTSHIP

  வர்த்தகம் மற்றும் சந்தை அணுகுதல் தொடர்பான பிரச்னைகளைக் கண்டறிந்து தெரிவிப்பதற்கான கதவு திறந்தே உள்ளது என்று இந்தியாவிடம் அமெரிக்கா கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பொருள்களுக்கு அளித்து வந்த வரி சலுகையை அமெரிக்கா கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப் பெற்றது. வரி சலுகை திரும்பப் பெறப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை கைத்தறி மற்றும் வேளாண் துறையைச் சேர்ந்தவை. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவுடனான வர்த்தகத்தில் டிரம்ப் நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை கடைபிடிப்பது இருநாடுகளுக்கிடையிலான உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
   இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
   இந்தியாவின் ஏற்றுமதி சந்தையின் முக்கிய பங்குதாரராகவும், மிக முக்கிய பொருளாதார கூட்டாளியாகவும் இருப்பது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இருப்பினும், எளிதாக வர்த்தகம் செய்வதற்கும், சந்தையை அணுகுவதற்கும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பொருள்கள் ஒழுங்காற்று விதிமுறை பிரச்னைகளுடன் போராடிய வேண்டிய நிலையே உள்ளது.
   இருதரப்பு உறவுகளில் ஏற்படும் விரக்திக்கு காரணம் வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதே. எனவே, இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ஒரு தீவிரமான முன்மொழிவு திட்டத்தை இந்தியா சமர்ப்பிக்குமானால் அதை பரிசீலிப்பதற்கு கதவுகள் திறந்தே உள்ளன.
   இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியைப் பொருத்தவரையில் அமெரிக்கா சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணமாக மட்டும், இருதரப்பு இடையிலான வர்த்தக பற்றாக்குறை 7.1 சதவீத அளவுக்கு குறைந்தது. இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல். இருப்பினும், நமது வர்த்தக உறவில் காணப்படும் பல கட்டமைப்பு சவால்களுக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமலே உள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai