சுடச்சுட

  

  10 மெகாவாட் சூரியமின் உற்பத்தி ஆலை: லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் இன்று தொடக்கம்

  By DIN  |   Published on : 17th March 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SOLAR

  கோவையைச் சேர்ந்த லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் நிறுவனம், 10 மெகாவாட் திறனிலான சூரியமின் உற்பத்தி ஆலையை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
   இதுகுறித்து லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ், மும்பை பங்குச் சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
   லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் சூரியமின் உற்பத்தியில் களமிறங்குகிறது. இதற்காக, கோவை மாவட்டம் கொண்டாம்பட்டியில் 10 மெகாவாட் திறனிலான சூரியமின் உற்பத்தி ஆலையை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இங்கு, போட்டோவோல்டிக் என்ற ஒளிமின்னழுத்த முறையை பயன்படுத்தி சூரியமின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் கமிஸா, பொறியியல், கட்டுமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளது.
   நிறுவனத்துக்கு சொந்தமாக காற்றாலைகள் மூலம் 36.80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனில் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரித்து வரும் மின் தேவையை ஈடு செய்ய உதவும் என அந்த அறிக்கையில் லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் தெரிவித்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai