அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,560 கோடி டாலராக (ரூ.28.39 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,560 கோடி டாலராக (ரூ.28.39 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின்  அந்நியச் செலாவணி கையிருப்பு  360 கோடி டாலர் (ரூ.25,200 கோடி) உயர்ந்து 40,560 கோடி டாலராகியுள்ளது.  அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு  அதிகரித்ததையடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளது.  
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 25.88 கோடி டாலர் உயர்ந்து  40,200 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு354.60 கோடி டாலர் அதிகரித்து  37,777 கோடி டாலராக இருந்தது. தேர்தலுக்கு முன்பு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்நிய நிதிநிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை பில்லியன் டாலர் மதிப்புக்கு வாங்கி குவித்தன. இதன்காரணமாகவே, அந்நியச் செலாவணி கையிருப்பானது சிறப்பான ஏற்றத்தை சந்தித்துள்ளது.   தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 3.89  கோடி டாலர் உயர்ந்து 2,340.8 கோடி டாலரானது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு 59 லட்சம் டாலர் அதிகரித்து 146 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு மதிப்பு 1.21 கோடி டாலர் உயர்ந்து  299.5 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. 
அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் வரலாற்றில் முதல் முறையாக 42,603 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், அதன்பிறகு சூழல்கள் சாதகமாக இல்லாத காரணத்தால் இந்தியாவின் மொத்த அந்நியச்  செலாவணி கையிருப்பில் 2,000 கோடி டாலர் (சுமார் ரூ.2.17 லட்சம் கோடி) அளவுக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com