பங்குச் சந்தையில் சரிவு நிலை: சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு நிலையே காணப்பட்டது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.
பங்குச் சந்தையில் சரிவு நிலை: சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி


இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு நிலையே காணப்பட்டது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது  சர்வதேச முதலீட்டாளர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி சர்வதேச சந்தைகளின் சரிவுக்கு மேலும் வழிவகுத்தது. அதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
2018-19-ஆம் நிதியாண்டு முடிவுக்கு வரவிருப்பதையடுத்து, உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளின் கையிருப்பை குறைத்துக் கொள்ளும் வகையில், லாப நோக்கம் கருதி அவற்றை விற்பனை செய்தனர். இதுவும், பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் குறியீட்டெண் 1.83 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. 
நிறுவனங்களைப் பொருத்தவரையில், வேதாந்தா நிறுவன பங்கின் விலை 3.28 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.31 சதவீதமும் குறைந்தன. 
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ஓஎன்ஜிசி பங்கின் விலை 3.90 சதவீதமும், கோல் இந்தியா 2.09 சதவீதமும், பவர் கிரிட் 1.56 சதவீதமும், என்டிபிசி பங்கின் விலை 1.19 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37,808 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 102 புள்ளிகள் குறைந்து 11,354 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 575 புள்ளிகள் இழப்பைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com