4ஜி ஒதுக்கீடு: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் டிராய் விரைவில் பேச்சு

4ஜி ஒதுக்கீடு: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் டிராய் விரைவில் பேச்சு

பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விரைவில்


பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விரைவில் அந்நிறுவனங்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது;
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு 4ஜி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்குவது தொடர்பான தொலைத் தொடர்புத் துறையின் குறிப்பறிக்கை இரண்டு நாள்களுக்கு முன்னதாக டிராய் அமைப்புக்கு கிடைத்துள்ளது. 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விரிவான ஆலோசனையை அந்த இரண்டு நிறுவனங்களிடம் விரைவில் மேற்கொள்வோம் என்றார் அவர்.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் அலைகற்றையை ஒதுக்குமாறு கோரியுள்ளது. செயல்பாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் மட்டும்தான் மிக குறைந்த அளவாக  ரூ.14,000 கோடி என்றளவில் உள்ளது. இந்த நிலையில், 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்க, சந்தையில் போட்டியை எதிர்கொள்ள உதவியாக ரூ.7,000 கோடி நிதியை அந்நிறுவனம் கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com