சுடச்சுட

  
  ford


  இந்தியாவில் டீசல் மாடல் கார்களின் விற்பனை தொடரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் (விற்பனை, சந்தைப்படுத்துதல் & சேவை) விநய் ரெய்னா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று டீசல் மாடல் கார்கள் தயாரிப்பை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. பிஎஸ்-6 மாசு கட்டுப்பாட்டு தர விதிமுறைகள் நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு வரும் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. நிறுவனம், அதற்கு முன்பாகவே டீசல் வாகனங்களை அந்த தர விதிமுறைக்கு ஏற்ப முழுவதும் தயார்படுத்தி  விடும்.
  நிறுவனத்தின் 65 சதவீத வாடிக்கையாளர்கள் எக்கோஸ்போர்ட் பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர். டீசல் மீதான மானியத்தை அரசு விலக்கி கொண்ட போதிலும் டீசல் கார்களுக்கான தேவை அதிகரித்தே வருகிறது. இந்த நிலை, வரும் 2020 மற்றும் அதற்கு மேலும் தொடரும் என்றார் அவர்.
  பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தும்போது அடுத்தாண்டு முதல் டீசல் கார்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாருதி சுஸுகி நிறுவனம் வரும் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தனது அனைத்து டீசல் மாடல் கார் தயாரிப்புகளையும் நிறுத்தப்போவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஃபோர்டு நிறுவனம் டீசல் கார் விற்பனையை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai