ஏப்ரல் மாத வாகன விற்பனையில் மந்த நிலை

மோட்டார்  வாகன தேவையில் மந்த நிலை காணப்பட்டதையடுத்து, உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட  பல நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவடைந்துள்ளன.
ஏப்ரல் மாத வாகன விற்பனையில் மந்த நிலை


மோட்டார்  வாகன தேவையில் மந்த நிலை காணப்பட்டதையடுத்து, உள்நாட்டைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட  பல நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவடைந்துள்ளன.
உள்நாட்டு சந்தையில் டாடா மோட்டார்ஸ் சென்ற ஏப்ரல் மாதத்தில் 12,694 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2018 இதே கால அளவில் விற்பனையான 17,235 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் குறைவாகும்.
மோட்டார் வாகன துறை தொடர்ந்து 10 மாதங்களாக பின்னடைவு வளர்ச்சியை கண்டு வருகிறது. இதற்கு, நுகர்வோர் புதிய வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருவதே முக்கிய காரணம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் (பயணிகள் வாகன வர்த்தகம்) மயங்க் பரீக் தெரிவித்துள்ளார். 
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 8.94 சதவீதம் சரிவடைந்து 19,966-ஆகியுள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 21,927-ஆக இருந்தது. நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருவது நுகர்வோர் வாகனம் வாங்கும் நடவடிக்கையை வெகுவாக பாதித்துள்ளது. தேர்தலுக்கு பிறகு நுகர்வோரிடையே வாகனத்துக்கான தேவை அதிகரிக்கும். பருவமழை வழக்கமாக இருக்கும் என்பதால் நடப்பு நிதியாண்டில் வாகன விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, டொயோட்டா கிர்லோஸ்கர் வாகன விற்பனையும் ஏப்ரலில் 22.43 சதவீதம் வீழ்ச்சி கண்டு 10,112-ஆகியுள்ளது.
வாகன விற்பனையில் முன்னிலையில் உள்ள மாருதி சுஸுகியின் ஏப்ரல் வாகன விற்பனை 18.7 சதவீதமும், ஹுண்டாய் நிறுவனத்தின் வாகன விற்பனை 10.1 சதவீதமும் குறைந்துள்ளன.
இருசக்கர வாகன பிரிவில், பஜாஜ் ஆட்டோவின் மோட்டார் சைக்கிள் விற்பனை 2.5 சதவீதம் அதிகரித்து 2,05,875-ஆனது. அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை 17 சதவீதம் சரிந்து 5,74,366-ஆகியுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 6,94,022-ஆக காணப்பட்டது. சந்தை சவாலான நிலையில் காணப்பட்ட போதிலும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2018-19 நிதியாண்டில் 78 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 13,626 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018-ஆம் ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 12,677 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 8,968 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவீதம் வளர்சி கண்டு 9,346-ஆக உள்ளது. இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 3,709-லிருந்து 15 சதவீதம் அதிகரித்து 4,280-ஆகியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனை 11,951 என்ற எண்ணிக்கையிலிருந்து 10 சதவீதம் அதிகரித்து 13,141-ஐ எட்டியுள்ளது என அந்த அறிக்கையில் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் நிறுவனம் 3,04,795 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
நடப்பாண்டில் இதே கால அளவில் நிறுவனத்தின் வாகன விற்பனை 5 சதவீதம் அதிகரித்து 3,18,937-ஆனது.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,93,419-லிருந்து 4 சதவீதம் உயர்ந்து 3,05,883-ஆனது. உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 2,48,456-ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை 9 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,43,063-ஆக காணப்பட்டது. ஸ்கூட்டர் விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 97,323-ஆக இருந்தது.
மூன்று சக்கர வாகன விற்பனை 11,377-லிருந்து 15 சதவீதம் உயர்ந்து 13,104-ஆனது.
மொத்த வாகன ஏற்றுமதி 61,798-லிருந்து 13 சதவீதம் அதிகரித்து 69,565-ஆக இருந்தது என செபியிடம் டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com