சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் ரூ.128 கோடி

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.128.02 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் ரூ.128 கோடி

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சிண்டிகேட் வங்கி ரூ.128.02 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கி ரூ.128.02 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
 முந்தைய 2017-18-ஆம் நிதியாண்டின் இதை கால அளவில், வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் வங்கி ரூ.2,195.12 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. எனினும், தற்போது வாராக்கடன் தள்ளுபடி குறைக்கப்பட்டுள்ளதால் லாபம் கிடைத்துள்ளது.
 ஏற்கெனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நிறுவனம் ரூ.107.99 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
 கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,345.22 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் வங்கியின் வருவாயான ரூ.6,046 கோடியோடு ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
 2018-19-ஆம் நிதியாண்டு முழுமைக்கும், வங்கியின் நிகர இழப்பு ரூ.2,524.20 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய 2017-08-ஆம் நிதியாண்டில், வங்கி ரூ.3,111.69 கோடி ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்தது.
 வருவாயைப் பொருத்தவரை, 2017-08-ஆம் நிதியாண்டில் ரூ.24,691.28 கோடியாக இருந்த அது, கடந்த நிதியாண்டில் ரூ.24,012.75 கோடியாகக் குறைந்துள்ளது.
 வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலண்டில் 11.37 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் அது 11.53 சதவீதமாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com